ஆப்நகரம்

இந்தோனேஷியா: ரசாயன மர்ம உறுப்பு அறுவை சிகிச்சை எதற்கு?

இந்தோனேஷியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அல்லது அவர்களுக்கு செக்ஸ் உணர்வை குறைக்கும் வகையிலான ரசாயன மர்ம உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ புதிய சட்டத்தை அறிவித்து எச்சரித்துள்ளார்.

TOI Contributor 26 May 2016, 4:20 pm
இந்தோனேஷியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அல்லது அவர்களுக்கு செக்ஸ் உணர்வை குறைக்கும் வகையிலான ரசாயன மர்ம உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடுடோ புதிய சட்டத்தை அறிவித்து எச்சரித்துள்ளார்.
Samayam Tamil child sex abusers in indonesia to face chemical castration
இந்தோனேஷியா: ரசாயன மர்ம உறுப்பு அறுவை சிகிச்சை எதற்கு?


இந்தோனேஷியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 14 வயது பெண்ணை இளைஞர்கள் பலர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சுமத்ரா தீவில் உள்ள வனத்தில் வீசிச் சென்றனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் குற்றம் அந்த நாட்டில் தொடர்வதைத் தடுக்கும் வகையில் அதிபர் இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

நேற்று இந்த சட்டத்தை அறிவித்து அவர் பேசுகையில், ''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் இருப்பதிலேயே பெரிய குற்றம். இந்த புதிய சட்டம் இந்தக் குற்றத்தை கட்டுப்படுத்தும், குறைக்கும் என்று நம்புகிறேன். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை, வளர்ச்சியை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. போலந்து, தென்கொரியா, செக் குடியரசு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதேபோன்ற சட்டம் அமலில் உள்ளது.

அடுத்த செய்தி