ஆப்நகரம்

குழந்தைகளிடம் 100 மடங்கு கொரோனா இருக்காம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மற்றவர்களை காட்டிலும் குழந்தைகளிடம் 100 மடங்கு அதிக கொரோனா வைரஸ் இருப்பதாக ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 31 Jul 2020, 6:37 pm

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகையே பாடுபடுத்தி வருகிறது. கொரோனா குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மற்றவர்களைக் காட்டிலும் குழந்தைகளின் மூச்சுக்குழாயில் ஐந்து மடங்கு அதிக கொரோனா வைரஸ் இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil கோவிட்-19 சோதனை


கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 669,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், குழந்தைகளிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவியது மிகக்குறைவு. அதேபோல, கொரோனா பரவலில் குழந்தைகள் பெரும் பங்கு வகித்துள்ளதாக எந்த சான்றுகளும் இல்லை.

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த நாய்!

இதுகுறித்து நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மார்ச் 23ஆம் தேதிக்கும் ஏப்ரல் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், குழந்தைகளிடையே கொரோனா பரவல் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், தங்கியிருக்கும் குழந்தைகள், எமர்ஜென்சி வார்டில் இருக்கும் குழந்தைகள் என பலருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள், 5 முதல் 17 வயது வரம்பிலானவர்கள், 18 முதல் 65 வயது வரம்பிலானவர்கள் என மூன்று பிரிவினரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கு 10 மடங்கு முதல் 100 மடங்கு அதிக கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

பரம்பரை நோய் எதிர்ப்பு சக்தி கொரோனாவை அழிக்குமா? WHO விளக்கம்!

குழந்தைகளால் கொரோனா பரவலின் வீரியம் அதிகரிக்குமா என இந்த ஆய்வு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.

அடுத்த செய்தி