ஆப்நகரம்

தலிபான்களுக்கு சீனா ஆதரவு: 31 மில்லியன் டாலர் உதவி!

தலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்து உதவிகளை வழங்க உள்ளது.

Samayam Tamil 9 Sep 2021, 12:45 pm
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு அமைத்துள்ள நிலையில் அதை சீன அரசு அங்கீகரித்துள்ளதோடு உதவிகளையும் அறிவித்துள்ளது.
Samayam Tamil china


ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் சீனா,பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதன் பின் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, “ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை தங்கள் நாடு வழங்கும். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.
நயினாரை ராக்கிங் செய்யும் சபாநாயகர் அப்பாவு? சட்டசபையில் கலகல!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, “ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என 31 மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட்டு அமைச்சர் பங்கேற்கவில்லை.

Sasikala: சசிகலாவுக்கு கிடைத்ததா டெல்லி சிக்னல்? ஓ இதுதான் காரணமா?

ஆப்கானிஸ்தானிலோ தலிபான்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அடுத்த செய்தி