ஆப்நகரம்

100 கோடி டோஸ் போட்டாச்சு.. சலுகை கொடுத்து சாதித்த சீனா!

சீனாவில் 100 கோடி டோஸ்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Jun 2021, 7:51 pm
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்குண்டு. எனவே, அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
Samayam Tamil Coronavac


இந்நிலையில், சீனாவில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்க்லளின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் மூன்றில் ஒரு பங்கை காட்டிலும் அதிகம்.

உலகளவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 250 கோடியை தாண்டியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சீனாவில் மட்டுமே 100 கோடி டோஸ்களுக்கு மேல் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 10 மாடிக் கட்டிடம் ரெடி.. எல்லாருக்கும் பயங்கர ஷாக்!
சீன மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. சீனாவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க சில சுவாரசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சில மாகாணங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவசமாக முட்டை வழங்கப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஷாப்பிங் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன.

அடுத்த செய்தி