ஆப்நகரம்

இருடா பாத்துக்கிறேன்; இந்தியாவுக்கா சப்போர்ட் பண்றே? ஜப்பானை மிரட்டும் சீனா...!

டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவான நிலையில் இருக்கும் ஜப்பானை, சீனா கண்டித்துள்ளது.

TNN 19 Aug 2017, 9:14 am
பெய்ஜிங்: டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவான நிலையில் இருக்கும் ஜப்பானை, சீனா கண்டித்துள்ளது.
Samayam Tamil china rebukes japan for comment on doklam
இருடா பாத்துக்கிறேன்; இந்தியாவுக்கா சப்போர்ட் பண்றே? ஜப்பானை மிரட்டும் சீனா...!


கடந்த 17ஆம் தேதி, இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் கெஞ்சி ஹிராமட்சூ தமது அறிக்கையில், டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் முயற்சித்த சீனாவின் நடவடிக்கை அத்துமீறல் என்றார்.

இதையடுத்து சீன வீரர்களை தடுத்ததால், எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனா மீதே தவறு உள்ளதாக ஜப்பான் குற்றம்சாட்டியது.

பூடான் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதாக, இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூ சுன்யிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ஜப்பானிய தூதர் இந்தியாவிற்கு ஆதரவளிக்க விரும்புகிறார். ஆனால் உண்மை என்ன என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கக் கூடாது. டோக்லாம் பகுதியில் இருதரப்புக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை.

இருநாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடு குறித்து, இருதரப்பும் தெளிவான அறிவு பெற்றிருப்பதாக கூறினார். அதேசமயம் எல்லையில் ஊடுருவல் செயல்களில் ஈடுபடுவது இந்தியா தான்; சீனா இல்லை.

சீன-ஜப்பான் உறவு, இந்தியாவைக் காட்டிலும் உறுதியானது. அதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜப்பானிற்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் சீன கருத்து தெரிவித்துள்ளது.

China rebukes Japan for comment on Doklam.

அடுத்த செய்தி