ஆப்நகரம்

ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சு: திடுக்கிடும் தகவல்!

இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 11:49 pm

கொரோனாவை தடுப்பதற்காக உலகம் முழுக்க சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், அமெரிக்காவை சேர்ந்த மாடெர்னா, ஃபைசர் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்று முன்னணியில் இருக்கின்றன.
Samayam Tamil Vaccine


இந்த தடுப்பூசிகளை வாங்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆர்டர் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், சீனா சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முதியோருக்கும் கொரோனா தடுப்பூசி ரெடி!

இதுகுறித்து சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோபார்ம் தலைவர் லியு ஜிங்ஷென் பேசியபோது, “அவசர பயன்பாட்டுக்காக ஏற்கெனவே சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு கூட எந்த சிக்கலும் ஏற்படவில்லை. சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

ஆராய்ச்சியில் தொடங்கி சோதனை, உற்பத்தி, அவசர பயன்பாடு வரை உலகிலேயே நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சீன நிறுவனங்கள் தடுப்பூசி தொடர்பான தரவுகளை வெளியிட மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனா இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சீனோபார்ம் தடுப்பூசி மட்டுமல்லாமல், சீனோவேக் பையோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியையும் அவசர தேவைக்காக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனா மாகாணத்தில் சீனோவேக் தடுப்பூசி அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி