ஆப்நகரம்

திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை - இனி ஜமாய்க்கலாம்!

சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணத்தில் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு திருமணத்திற்கும், தேனிலவுகும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

Samayam Tamil 2 Feb 2018, 8:45 am
சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணத்தில் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு திருமணத்திற்கும், தேனிலவுகும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
Samayam Tamil chinas provinces offer to subsidize weddings to promote marriage
திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை - இனி ஜமாய்க்கலாம்!

ஷாங்க்‌ஷி மாகாணத்தில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் குறைந்து வருகின்றது. அப்பகுதி மக்களின் திருமண வயதாக பெண்ணுக்கு 23 வயதும், ஆணுக்கு 25 வயதும் இருக்க வேண்டும்.ஆனால் 60% மேலானோர் இந்த வயதை தாண்டி தான் திருமணம் செய்கின்றனர்.

இதனால் கவலையடைந்துள்ள குய்ச்சோ மாகாண அரசு, இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கும் முயற்சியாக திருமணம் மற்றும் தேனிலவு செலவுக்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் செலவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நிதி உதவி அளிக்க புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அடுத்த செய்தி