ஆப்நகரம்

பேராபத்திலிருந்து தப்பியது பூமி, கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்!

விண்வெளியில் கட்டுபாட்டை இழந்து சுற்றிக்கொண்டிருந்த சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் நேற்றிரவு பசிபிக் கடலில் விழுந்தது.

Samayam Tamil 2 Apr 2018, 2:29 pm
விண்வெளியில் கட்டுபாட்டை இழந்து சுற்றிக்கொண்டிருந்த சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம், நேற்றிரவு பசிபிக் கடலில் விழுந்தது.
Samayam Tamil கடலில் விழுந்த சீன விண்வெளி நிலையம் டியாங்காங் 1
கடலில் விழுந்த சீன விண்வெளி நிலையம் டியாங்காங் 1


கடந்த 2012 ஆம் ஆண்டு டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை சீனா விண்ணில் ஏவியது. அந்த விண்வெளி ஆய்வு நிலையம், 2016 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, அது பூமியின் மீது மோதும் என ஆராய்ச்சியாளர்கள் முன்கூட்டியே தெரிவித்தனர்.

சுமார் 8,500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் போது, விண்கல் மோதிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதில் நிரப்பப்பட்டுள்ள எண்ணெய் போன்ற ஹைட்ரஜன் வாயுவை மனிதர்கள் சுவாசித்தால், புற்றுநோய் ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்த விண்வெளி ஆய்வு நிலையம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலை பூமியின் மீது மோதும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சரியாக எந்த இடத்தில் மோதும் என்றதகவல் கிடைக்காததால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் இருந்தனர்.

இந்நிலையில், அந்த விண்கலம் தெற்கு பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக சீனாவின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பேராபத்து தவிர்க்கப்பட்டதாக அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும், அந்த விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள பொருட்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி