ஆப்நகரம்

திபெத்தில் அதிநவீன போர் விமானத்தை மறைத்து வைத்துள்ள சீனா!

பிரதமர் மோடி சீனா சென்றுள்ள நிலையில், திபெத் விமானப் படை தளத்தில் இந்தியாவை நோக்கி, அதிநவீன போர் விமானம் ஒன்றை அந்நாடு நிறுத்திவைத்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

TNN 3 Sep 2016, 6:19 pm
பிரதமர் மோடி சீனா சென்றுள்ள நிலையில், திபெத் விமானப் படை தளத்தில் இந்தியாவை நோக்கி, அதிநவீன போர் விமானம் ஒன்றை அந்நாடு நிறுத்திவைத்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil chinas top secret stealth fighter spotted in tibet days after it warned india
திபெத்தில் அதிநவீன போர் விமானத்தை மறைத்து வைத்துள்ள சீனா!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், இந்தியாவை ஒட்டி, இமயமலை எல்லைப் பகுதியான திபெத்தின் விமானப்படை தளத்தில் அதிநவீன போர் விமானம் ஒன்றை சீனா மறைத்து, வைத்துள்ளதாக புகைப்படங்களும், செய்திகளும் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக, சமூக வலைதளங்கள் மட்டுமின்றி சீனாவின் விமான செய்தித்தளத்திலும் தகவல் வெளியாகியுள்ளது. இது, அந்நாட்டின் சகிப்பற்ற தன்மையை காட்டுவதாக, அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்தியாவின் கிடுகிடு பொருளாதார வளர்ச்சியால், சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.

வெளிப்பார்வைக்கு நண்பனாக காட்டிக் கொண்டாலும், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்த செல்வாக்கு பெறுவதை சீனா விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, தற்போது ரகசியமாகப் போர் விமானம் ஒன்றை தயாரித்து, இந்தியாவை நோக்கி, எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தியும் உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி