ஆப்நகரம்

பாகிஸ்தான் கிருஸ்துவ பெண்களை ஏமாற்றும் சீனர்கள்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிருஸ்துவ மக்களின் குடும்பங்களில் உள்ள திருமண வயதான பெண்கள் சீனர்களால் ஏமாற்றப்பட்டு திருமணம் செய்யப்படுகிறார்கள். இந்த பெண்களை சீனாவுக்கு கடத்த பல இடைத்தரகர்கள் உதவுகின்றனர். ஏழை சிறுபான்மை சமூகத்திடம் எளித்தாக ஏமாற்றி பெண்களை இவ்வாறு கடத்த இந்த இடைத்தரகர்கள் உதவிகரமாக உள்ளனர்.

Samayam Tamil 7 May 2019, 3:38 pm
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிருஸ்துவ மக்களின் குடும்பங்களில் உள்ள திருமண வயதான பெண்கள் சீனர்களால் ஏமாற்றப்பட்டு திருமணம் செய்யப்படுகிறார்கள்.
Samayam Tamil 920x920


திருமணத்துக்குப் பின்னர் சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படும் இவர்கள் தங்களது சீன கணவர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாகிஸ்தானில் இவர்கல் குடியிருக்கும் பஞ்சாப் மாகாணத்துக்கு திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

இவர்களில் பலர் திரும்ப வரும்போது கர்ப்பமாக உள்ளார்கள். இதனைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பெண்களை சீனாவுக்கு கடத்த பல இடைத்தரகர்கள் உதவுகின்றனர். ஏழை சிறுபான்மை சமூகத்திடம் எளித்தாக ஏமாற்றி பெண்களை இவ்வாறு கடத்த இந்த இடைத்தரகர்கள் உதவிகரமாக உள்ளனர்.

200 மில்லியன் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் வெறும் 2.5 மில்லியன் அளவே ஜனதொகை கொண்ட பாகிஸ்தான் கிருஸ்துவர்களில் சிலர் தங்கள் மகள்களை அவர்களுக்கு அளிக்கப்படும் பணத்துக்காக சீன செல்வந்தர்களுக்கு மணம் முடிக்கின்றனர். இது உலகெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி