ஆப்நகரம்

பன்றியின் பித்தப்பை கல் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன விவசாயி.!

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலமாக, பெரிய கோடீஸ்வரரான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 4 Dec 2017, 11:56 am
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலமாக, பெரிய கோடீஸ்வரரான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil chinese man set to become millionaire after finding pigs gallstone
பன்றியின் பித்தப்பை கல் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன விவசாயி.!


சீனாவைச் சேர்ந்த 51 வயது நிரம்பிய விவசாயி ஒருவர், தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதை விதைப்பதற்காக நிலத்தை உழுதிருக்கிறார். அப்போது வித்தியாசமான கல் போன்ற பொருள் ஒன்று விவசாயிக்கு கிடைத்துள்ளது.

4 இஞ்ச் நீளமும், 2.5 இஞ்ச் அகலமாகவும் இருந்த அந்த கல்லின் மீது, அடர்த்தியாக ரோமங்கள் மூடி இருந்தன. அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் விவாதித்தார். அப்போது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என்பது தெரிய வந்தது.

‘கோரோசனை’ என்று அழைக்கப்படும் இந்த பித்தக்கல், பலவிதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாகும். மேலும் உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை உடையது என்பதால் இது மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே விவசாயி கண்டுபிடித்த பன்றி பித்தப்பை கல் ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன விவசாயி ‘திடீர்’ கோடீஸ்வரர் ஆகி விட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி