ஆப்நகரம்

தலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு சீன அரசு ஊடகம் மிரட்டல்

அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய் லாமாவை அனுமதித்த குற்றத்திற்கான தண்டனை இந்தியாவுக்கு வழங்கப்படும் என, இந்தியாவுக்கு சீன அரசு ஊடகம் மிரட்டல் விடுத்துள்ளது.

TNN 21 Apr 2017, 2:38 pm
அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய் லாமாவை அனுமதித்த குற்றத்திற்கான தண்டனை இந்தியாவுக்கு வழங்கப்படும் என, இந்தியாவுக்கு சீன அரசு ஊடகம் மிரட்டல் விடுத்துள்ளது.
Samayam Tamil chinese media warn india over dalai lamas arunachal visit
தலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு சீன அரசு ஊடகம் மிரட்டல்


திபெத் மக்களின் தலைவராக அறியப்படும் தலாய் லாமா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளனர். திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனா, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தலாய் லாமா உள்ளிட்டோரை வெளியேற்றும்படி இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இந்தியா மறுப்பு தெரிவிப்பதால், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில எல்லையோரப் பகுதிகளை தனக்குச் சொந்தமான இடம் என சீனா உரிமை கொண்டாட தொடங்கியுள்ளது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு தெற்கு திபெத் எனப் பெயர் சூட்டிய அந்நாடு, அங்குள்ள மேலும் 6 இடங்களின் பெயரை சீன மொழியில் மாற்றியும் உள்ளது. இதற்கான வரைபடம்கூட விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன அரசுக்குச் சொந்தமான #GlobalTimes பத்திரிகையில்,’’தலாய் லாமா விவகாரத்தில் இந்தியா தொடர்ச்சியாக, விரோதம் காட்டிவருகிறது. இதனால், தெற்கு திபெத்தை நாம் மீட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரட்டைவேட அரசியல், அந்நாட்டுக்கே பாதகமான விளைவுகளை தேடித்தரும். இதற்கான விளைவு கடுமையானதாக இருக்கும்,’’ என்று எச்சரித்து, தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருவேளை, இந்தியா மீது சீனா போர் தொடுக்கவும் வாய்ப்புள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

India will pay “dearly” for allowing the Dalai Lama to visit Arunachal Pradesh, Chinese media said on Friday, indicating that Beijing’s renaming of six places in the state was in retaliation to the Tibetan spiritual leader’s trip to northeast.

அடுத்த செய்தி