ஆப்நகரம்

கொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு WHO உடந்தை!

கொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு உலக சுகாதார மையம் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 3:38 pm

கடந்த டிசம்பர் மாதம் முதல்முறையாக சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் கொரோனா படிப்படியாக உலகம் முழுவதும் பரவிவிட்டது.
Samayam Tamil WHO China


கொரோனாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. ஒருபுறம், கொரோனாவை சீனாவே தயாரித்து பரவவிட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம், கொரோனாவை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுக்க வேண்டுமென்றே சீனா பரவவிட்டுள்ளதாக அமெரிக்க அரசே குற்றம்சாட்டி வருகிறது.

கொரோனா வைரஸை வுகானில் உள்ள லேபில் சீன அரசே உற்பத்தி செய்ததாக சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட் வல்லுநர் லி மெங் யான் ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார். இவர் சீனாவை விட்டு தப்பி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியர்களால் அமெரிக்கா வளர்ந்தது - அதிபர் வேட்பாளர் புகழாரம்!

தற்போது உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸ் வுகான் லேபில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புதிய தகவலில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனாவுக்கு போதிய விழிப்புணர்வு இருந்ததாகவும், இதை மறைக்க உலக சுகாதார மையம் உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மீதான மதிப்பையும், நம்பகத்தன்மையையும் சிதைக்க சீன அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், சீனாவில் இருக்கும் தனது குடும்பத்தினரை அரசு மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி