ஆப்நகரம்

பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்: சீனாவில் தொழிலாளருக்கு நேரும் அவலம்

சீனாவில் நாளுக்கு நாள் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. அது தொடர்பான செய்தியை இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 8 Nov 2018, 5:27 pm
சீனாவில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்று, தொழில்ரீதியான இலக்குகளை எட்ட தவறிய ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்தும், கரப்பான்பூச்சிகளை சாப்பிட வைத்தும், சாட்டையால் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil targi-pracy-w-chinach-recesja-w-chinach
சீனாவில் நடக்கும் உழைப்புச் சுரண்டல்- மோசமாகி வரும் தொழிலாளர்கள் நலன்


பெய்ஜிங் மாகாணத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வீட்டை சீரமைக்கும் நிறுவனம் ஒன்று, தொழிலாளர்களை பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

குயிஜாவூ மாகாணத்தின் இயங்கும் ஊடகம் ஒன்று, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அந்த நிறுவனம் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் வன்முறை சார்ந்த விஷயங்கள் வெளிவந்துள்ளன.

போட்டிகளை சமாளிக்க முடியாத ஊழியர்கள் கழிவறைக்கு சென்று, அங்கு யூரினல்லிருந்து நேரடியாக சிறுநீரை குடிக்க வேண்டும். மேலும், கரப்பான்பூச்சிகளை பச்சையாக பிடித்து சாப்பிட வேண்டும். மேலும் சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பது மற்றும் தலையை மொட்டை அடிப்பது போன்ற கொடுமைகளும் அங்கு நடந்துவந்துள்ளன.

இதுதவிர, லெதர் காலணிகளை அணியாத தொழிலாளர்களுக்கு 50 யுவான் வரை அபராதம் விதிக்கப்படுமாம். இது தொடர்பான நடவடிக்கைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் மீதான புகார்கள் அடங்கிய ஆதாரங்கள் இனையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பெய்ஜிங் மாகாண போலீசார், இந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து, தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய 3 மேலாளர்களை சிறையில் அடைத்துள்ளது. விரைவில் அவர்களுக்கு மாநில அரசாங்கம் தண்டனை உறுதிசெய்யும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனாவின் சமூக ஆர்வலர்கள், நாட்டில் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. உழைப்புச் சுரண்டல் சீனாவில் அதிகரித்து விட்டது. பணியாளர்கள் பல மணிநேரம் வேலை செய்தாலும், அவர்களுக்கு மிகவும் சொற்பமான பணம் தான் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

அடுத்த செய்தி