ஆப்நகரம்

அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த சி.ஐ.ஏ

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கு, சி.ஐ.ஏ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNN 30 Nov 2016, 8:26 pm
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கு, சி.ஐ.ஏ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil cia chief warns new us president donald trump
அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த சி.ஐ.ஏ


அமெரிக்காவின் புதிய அதிபராக தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் செல்லாது என்றும், அதனை கிழித்து எறியப் போவதாகவும் தெரிவித்தார். இதற்கு அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் ஜான் பிரன்னன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சிரியாவில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளியுறவுத்துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமாவின் பாதையை கடைபிடிக்க வேண்டும் என்று ஜான் பிரன்னன் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் புதிய அதிபர் டிரம்ப் அறிவாற்றலுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

CIA chief warns New US president Donald Trump.

அடுத்த செய்தி