ஆப்நகரம்

காணாமல் போன துபாய் இளவரசிக்கு இந்த நிலைமையா? - மனித உரிமை அமைப்பு கேள்வி

துபாய் இளவரசி காணாமல் போய் 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று வரை அவர் எங்கிருக்கிறார், உயிருடன் தான் இருக்கிறார என்ற தகவல் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.

Samayam Tamil 7 May 2018, 5:40 pm
துபாய் இளவரசி காணாமல் போய் 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று வரை அவர் எங்கிருக்கிறார், உயிருடன் தான் இருக்கிறார என்ற தகவல் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.
Samayam Tamil concerns grow for whereabouts of dubai princess sheikha latifa following failed escape
காணாமல் போன துபாய் இளவரசிக்கு இந்த நிலைமையா? - மனித உரிமை அமைப்பு கேள்வி


துபாய் அரசரான ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளும் நாட்டின் இளவரசியுமான ஷேய்கா லத்தீஃபா, தன் குடும்பத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகள் தன் மீது திணிப்பதாக கூறி அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். ஆனால் தப்பி சென்ற இளவரசி எங்கு உள்ளார். அவரை துபாய் அதிகாரிகள் மீட்டு மீண்டும் துபாய்க்கு அழைத்து சென்றதாக சிலர் பார்த்ததாக தகவல் கசிந்துள்ளது.


லத்தீஃபா காணாமல் போய் 2 மாதங்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்த கேள்விக்கு எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனதிலிருந்து இளவரசி எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

லத்தீஃபா நாட்டை விட்டு தப்பிச் செல்ல பிரான்ஸ் நாட்டின் ரகசிய ஏஜெண்ட் ஒருவரும், பின்லாந்து தற்காப்பு கலை பயிற்றுநர் ஒருவரும் உதவியதாக செய்தி வெளியாகின.

மனித உரிமை அமைப்பு கேள்வி :

லத்திஃபா காணாமல் போனதிலிருந்து எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார், என 2மாதங்களாக எந்த தகவலும் அரசு வெளியிடாதது ஏன்?. இதனால் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இதன்மூலம் அவர் நிர்பந்தத்தின் காரணமாக தான் நாட்டை விட்டு சென்றார் என தெரிகிறது. அவரை அனைவரின் கண் முன் நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி