ஆப்நகரம்

கிழக்கு சிரியாவில் குண்டு வீச்சு: 1000 பேர் பலி

கிழக்கு சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Mar 2018, 1:53 pm
கிழக்கு சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Samayam Tamil convoy delivers food to syrias besieged ghouta amid shelling
கிழக்கு சிரியாவில் குண்டு வீச்சு: 1000 பேர் பலி


சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பலரை சிரிய ராணுவம் கொன்று குவிக்கிறது.

இந்நிலையில், கிழக்கு சிரியாவில் உள்ள கூட்டா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்ட நிலையிலும் அங்கு சிரிய ராணுவத்தின் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி