ஆப்நகரம்

LIVE: 'கோவிட் மேரி' - பிலிஃபைன்சில் இன்று பிறந்த குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்!!

உலகம் முழுக்க நடைபெறும் கொரோனா வைரஸ் தொடர்புடைய முக்கியச் சம்பவங்களின் தொகுப்பு

Samayam Tamil 29 Apr 2020, 5:31 pm
உலகம் முழுக்க இன்றைய நிலவரப்படி 3.1 மில்லியன் (31 லட்சம்) பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil corona worldwide


உலக நாடுகள் பலவும் மருந்தாராய்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றன. எனினும் தற்காப்பே தற்போது ஒரே மருந்தாக இருக்கிறது.

லைவ் அப்டேட்ஸ்:

பிலிஃபைன்ஸ் இன்று பிறந்துள்ள பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் 'கோவிட் மேரி' என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா காலத்தில், புதிய நம்பிக்கையின் அடையாளமாக தங்களுக்கு மகள் பிறந்துள்ளார் என்று அக்குழந்தையின் பெற்றோர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.



* கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருகைப்புரிய ஜூன் 14 ஆம் தேதி வரை தடை விிதிக்கப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.



* ஸ்பெயினில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்துவந்த நிலையில், இன்று மீண்டும் அங்கு ஒரே நாளில் 325 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.



* பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, இலங்கை நாடாளுமன்றம் கடந்த மாதம் (மார்ச்) கலைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தற்போது தேர்தல் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.



அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின்,இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உயிரிழப்புகள் மொத்த சதவீதத்தில் 70% மேலாக பதிவு செய்துள்ளன.

அடுத்த செய்தி