ஆப்நகரம்

கொரோனாவின் கோரத்தாண்டவம்: 18 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி

கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் இதுவரை பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Samayam Tamil 25 Mar 2020, 12:29 am
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது.
Samayam Tamil corona world update


ஈரான், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் என ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாகுபாடு இல்லாமல் உலகின் பெரும்பாலான நாடுகள் இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

மார்ச் 24 ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா வைரசின் கோரப்பசிக்கு பல்வேறு நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

ஸ்பெயினில் கோரோனா: ஒரே நாளில் பலி 514 பேர் பலி

அதிகபட்சமாக நேற்று, இத்தாலியில் 601 பேர், ஸ்பெயினில் 539 பேர் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்துள்ளனர். அதிகபட்சமாக, இத்தாலியில் இதுவரை மொத்தம் 6,077 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், உலக முழுவதும் வெவ்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியவர்களில் 1,07, 089 பேர் தகுந்த சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.

கொரோனாவை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்: ஒருவர் பலி!!

ஆனால், இன்னும் மொத்தம் 4,11,242 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிர் பயத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 10,168 பேர், இத்தாலியில் 4,789 பேர், ஸ்பெயின் நாட்டில் 6,368 நபர்கள், ஜெர்மனியை சேர்ந்த 4,183 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி