ஆப்நகரம்

அடேயப்ப்பா, கொரோனா இன்னும் இத்தனை வருசம் இருக்குமா?

கொரோனா தாக்கம் மேலும் சில பத்தாண்டுகள் உணரப்படும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Aug 2020, 7:22 am
கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை, பாதிப்பு குறைந்து வருகிறது, விரைவில் தடுப்பு மருந்து சந்தைக்கு வந்துவிடும் என ஆறுதல் வார்த்தைகளை அரசுகள் கூறி வந்தாலும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
Samayam Tamil world health organization


உலகையே கடந்த எட்டு மாதங்களாக முடக்கிப் போட்டுள்ளது கொரோனா. இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிய உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“கொரோனா தொற்றுநோய் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுகாதார நெருக்கடி, இதன் விளைவுகள் மேலும் சில பத்தாண்டுகளுக்கு உணரப்படும் ”என்று டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின் கூட்டத்தில் கூறினார்.

குழந்தைகளிடம் 100 மடங்கு கொரோனா இருக்காம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பரவத் தொடங்கியதிலிருந்து இந்த தொற்றுநோயால் 6 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 17 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா ஆகிய நாடுகள் சமீபத்திய வாரங்களில் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பயந்தால் பசியாறுமா? கொரோனா மருத்துவக் கழிவுகளில் ரிஸ்க் எடுக்கும் தொழிலாளர்கள்!

இதன் பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட பொது முடக்கம் கட்டுப்பாடுகளால் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பல நாடுகள் இரண்டாவது அலை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றன.

இதற்கிடையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் முதல் பயன்பாட்டை 2021ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறியது.

இந்த வைரஸ் பற்றிய புரிதல் தற்போது அதிகரித்திருந்தாலும், பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை, மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என்று டெட்ரோஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அடுத்த செய்தி