ஆப்நகரம்

கணவாய் மீன்களில் கொரோனா - சீனாவில் ஷாக்!

சீனாவில் கணவாய் மீன் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 7:29 pm

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுக்க படிப்படியாக கொரோனா பரவிவிட்டது. எனினும், தீவிர முயற்சியாலும், கடுமையான கட்டுப்பாடுகளாலும் சீனா கொரோனா பாதிப்பை கணிசமாக குறைத்துவிட்டது.
Samayam Tamil Squid


கடந்த சில மாதங்களாகவே சீனா கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்தியுள்ளது. மனிதர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து வரும் கடல் உணவுகள், இறைச்சி உள்ளிட்டவற்றை சீனா தீவிரமாக பரிசோதித்து வருகிறது.

இதற்கு முன்பே, இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகள், மீன், கோழிக்கறி பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பதை சீனா கண்டறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தது. சில நாடுகளில் இருந்து இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

மீண்டும் கொடிய நோய் - சீனாவில் பன்றிக் கறிக்கு அதிரடி தடை!

இந்நிலையில், சீனாவின் வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் உள்ள ஃபுயு நகரில் இறக்குமதி செய்யப்பட்ட கணவாய் மீன் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், சந்தையில் கணவாய் மீன்களை வாங்கிய மக்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கணவாய் மீன்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தட்ட நிறுவனங்கள் இறக்குமதி செய்ய ஒரு வார காலம் தடை விதிக்கப்படும் என்று சீன சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி