ஆப்நகரம்

மீன்களில் கொரோனா... கதறும் சீனா!

சீனாவில் யண்டாய் நகரில் கடல் உணவு பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 7:21 pm

சீனாவில் உள்ள தலியன் துறைமுகத்தின் வாயிலாக கொண்டுவரப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவு பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பதை சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அண்மையில் தலியன் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil சீன கடல் உணவு சந்தை


தலியனில் இருந்து யண்டாய் நகருக்கு கொண்டுவரப்பட்ட கடல் உணவு பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த பேக்கேஜிங் எந்த நாட்டிலிருந்து வந்தது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ஜூலை மாதத்தில் தலியன் துறைமுகத்தில் இறால் மீன் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த இறால் மீன்கள் ஈக்வடார் நாட்டிலிருந்து வந்தவை. இதைத்தொடர்ந்து ஈக்வடார் நாட்டில் இருந்து வரும் இறால் மீன்களுக்கு சீன அரசு தற்காலிக தடை விதித்தது.

கொரோனாவின் தொடக்கப்புள்ளி வுகான் இயல்பு நிலைக்கு திரும்பியது!

யண்டாய் நகருக்கு வந்த கடல் உணவு பேக்கேஜிங்கில் சில பொருட்கள் மட்டும் பதப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற கடல் உணவு பொருட்கள் இன்னும் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று யண்டாய் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இப்பொருட்கள் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இப்பொருட்களை கையாண்ட ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட இறால் மீன்களில் கொரோனா கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் கடல் உணவில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி