ஆப்நகரம்

சீனாவில் மீண்டும் கொரோனா: அதிர்ச்சியளிக்கும் செய்தி!

உணவுப் பொருள்களின் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Oct 2020, 3:48 pm
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பியுள்ளது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உடல் ரீதியான பாதிப்புகளைப் போன்றே பொருளாதார ரீதியாகவும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil covid in packaged food cover


கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுஒரு பக்கம் இருக்க, கொரோனா வைரஸ் புதிதுபுதிதாக வெவ்வேறு இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

சீனாவின் கிங்டாவோ நகரில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்று உணவுப் பிட்டலங்களின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டது இது முதன்முறையாகும். சிடிசி என்கிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹேப்பி நியூஸ்: இலவச வைபை வசதி பெற இதை செய்தால் போதும்!

இந்த உணவுப்பொருள் எந்த நாட்டிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த பேக்கேஜிங்கை தொடுகிறவர்களை கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

7 மாசத்துக்கு பின் இஸ்லாமியர்கள் ஹேப்பி; அதுவும் மெக்கா கிராண்ட் மசூதியில்...!

புதிதுபுதிதாக வெவ்வேறு ரூபங்களில் கொரோனா வைரஸ் மக்களை தாக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.

அடுத்த செய்தி