ஆப்நகரம்

கொரோனாவுக்கு எதிரான போர்: சிங்கப்பூர் அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2020, 4:44 pm
கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரசில் இகுந்து தற்காத்து கொள்ள இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோருக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil singapore


இவற்றின் காரணமாக, 'வருமுன் காப்போம்' என்ற கூற்றின்படி, வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற, உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு எனும் ஒற்றை வழிமுறையை பின்பற்றி வருகின்றன.

இதற்கு தாங்களும் விதிவிலக்கல்ல என்பதை போல், சிங்கப்பூர் அரசும் மே மாதம் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும் அங்கு நாள்தோறும் கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு

இதனை கருத்தில் கொண்டு, கொரோனா பரவல் தடுப்பு தொடர் நடவடிக்கையாக, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இதுநாள் வரை மொத்தம் 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி