ஆப்நகரம்

பிரதமருக்கே கொரோனா: அதிர்ச்சியில் ரஷ்ய மக்கள்!!

தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக, ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஸ்சுஸ்டின் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Apr 2020, 11:39 pm
கொரோனா வைரஸ் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசங்களின் எல்லைகள் என எவ்வித பாகுபாடுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் வாட்டி வதைத்துவரும் கொரோனா வைரஸுக்கு ஏழை, பணக்காரர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்றும்கூட பாகுபாடில்லை.
Samayam Tamil raussian pm


இதனை நிரூபிக்கும் விதத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.. இதையடுத்து சில நாள்கள் வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலை சற்று மோசமடைந்ததையடுத்து, போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்துக்கும் மேலான சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வீடு திரும்பினார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரிக்கு தம்பதிக்கு ஆண் குழந்தை!!

இந்த நிலையில் தற்போது, ரஷ்ய பிரதமர் மிக்கல் மிஸ்சுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். தமது அமைச்சரவை சகாக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கிம் ஜாங் உன்’ ஒரு ரிசார்ட் நகரில் நலமாக உள்ளார் : தென்கொரியா

ஜனவரி மாத இறுதியிலேயே சர்வதேச எல்லைகளை மூடியதுடன், விமானப் போக்குவரத்தை ரத்து செய்தது, பொது முடக்கத்தை அறிவித்தது என்று கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக மேற்கொண்ட நாடாக ரஷ்யா திகழ்கிறது.

இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமருக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி