ஆப்நகரம்

வாயை மூடிட்டு இரும மாட்டிங்களா..? சண்டை மூட்டிவிட்ட கொரோனா...

ஆஸ்திரேலியாவில் ரயில் சென்ற பெண் பயணி ஒருவர் இருமியதற்கு சக பயணி ஒருவர் கேள்வி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Samayam Tamil 12 Mar 2020, 8:00 pm
கொரோனா வைரஸ் தீவிரமானதையடுத்து மக்கள் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதுவும் வெளிநாடுகளில் போது இடங்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கும் தயங்குகின்றனர். பொது இடங்களில் சாதாரணமாக இருமினால்கூட நோயாளியை பார்ப்பதை போலவே பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
Samayam Tamil ஆஸ்திரேலியாவில் ரயில் சென்ற பெண் பயணி ஒருவர் இருமியதற்கு சக பயணி ஒருவர் கேள்வி கேட்டதால் வாக்குவாதம்


இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரயில் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதில் எதிரெதிரே இரு பயணிகள் அமர்ந்துள்ளனர்.அப்போது அந்த பெண்ணுக்கு இருமல் வந்துள்ளது.


ஆனால் அப்பெண் இருமும்போது கைக்குட்டை எதையும் உபயோகிக்கவில்லை. இதனால் அப்பெண்ணுக்கு முன்னாள் அமர்ந்திருந்த ஒருவர், '' இருமும்போது கைகளால் வாயை மூடுங்கள் என அட்வைஸ் செய்கிறார். அதற்க்கு அந்த பெண், நான் இருமும்போது வாயை திறக்கவில்லை.

அதனால் எந்த பாதிப்பு கிடையாது என பதிலளிக்கிறார். இதயடுத்து அந்த நபர், நீங்கள் என்ன மருத்துவரா? இல்லைதானே வளவளன்னு பேச வேண்டாம்.

‘இரும்பு மழை’ பொழியும் நிலவு போன்ற கோள் கண்டுபிடிப்பு

அமைதியாக இருங்கள் என கூறினார். ஆனால் அந்த பெண்ணுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் சிறிது நேரம் வரைக்கும் நீடித்து பின்னர் அடங்கியது. இந்த சம்பவத்தை ரயிலில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி