ஆப்நகரம்

மறக்க முடியா நிகழ்வு; படகில் சென்று வெள்ளத்தில் மிதக்கும் தேவாலயத்தில் திருமணம்!

வெள்ளத்தில் தத்தளித்த தேவாலயத்திற்கு சென்று, உறவுகளுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 3:58 pm
மணிலா: வெள்ளத்தில் தத்தளித்த தேவாலயத்திற்கு சென்று, உறவுகளுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil Marriage


பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ’யாகி’ புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் தத்தளித்தன. பொதுமக்கள் உடைமைகளை இழந்து, முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த சூழலில் புலாகான் பகுதியைச் சேர்ந்த ஜோபல் டேலோல் ஏஞ்சல்ஸ்(24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் திருமணம் நடத்தவிருந்த தேவாலயம் நீரில் தத்தளித்து காணப்பட்டது. அப்போது ‘பெரு வெள்ளமோ, பெரு மழையோ, திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான் வருகிறது.

இதனை ஏன் தள்ளிப் போட வேண்டும் என்று ஜோபல் கேட்டுள்ளார். இதையடுத்து தேவாலயம் செல்ல படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்மூலம் இருவீட்டாரும் சென்றனர்.

அங்கு செல்வதற்கும் திருமண ஆடைகள் நனைத்து போயின. இருப்பினும் அதை ஒரு பொருட்டாக கருதாமல், வெற்றிகரமாக திருமணம் நடத்தி முடித்துள்ளனர். இந்த செய்தி கேட்டு, புதுமணத் தம்பதிகளுக்கு ஏராளமானோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகின்றனர்.

Couple married flooded church in Philippines.

அடுத்த செய்தி