ஆப்நகரம்

சே வரலாறு மட்டும் அல்ல... அநீதிக்கெதிராக போராட வேண்டிய வழி முறை...

புரட்சியாளர் சே குவேரா மரணித்து, இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. அவரது இறுதி நாளில் நடந்தவற்றை குறித்து இங்கே காணலாம்.

TNN 9 Oct 2017, 7:29 pm
புரட்சியாளர் சே குவேரா மரணித்து, இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. அவரது இறுதி நாளில் நடந்தவற்றை குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil cuban revolutionist symbol of rebellion died today
சே வரலாறு மட்டும் அல்ல... அநீதிக்கெதிராக போராட வேண்டிய வழி முறை...


பொலிவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்தன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலணிகள். அழுக்கேறிய உடைகள்.

அந்த அறைக்குள் நுழைகிறார் அப்பள்ளியின் ஆசிரியர் #ஜீலியா கோர்ட்ஸ். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டு நிலையில் அவர் மெல்ல கண் திறக்கிறார். யாரது? என்று கேட்கிறார்.

தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன் என்று அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.

இது என்ன இடம்? பள்ளிக் கூடம்.

இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரமமாக இல்லையா? என்று கேட்கிறார்.

அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியை இவரால் கேட்க முடிகிறது என்று மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.

கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன் என்றார்.

கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே செல்கிறார் ஆசிரியர்.

இவர்தான் "சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !" என்ற முழக்கமிட்ட புரட்சியாளர் #சேகுவேரா.

அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

உலகெங்கும் புரட்சியின் போது தன் நாட்டு மக்களுக்கு சீறிப்பாய்ந்த தோட்டாக்களுக்கு மத்தியில், நாடுகளின் எல்லைகள் கடந்து ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாய்ந்தது சேவின் துப்பாக்கித் தோட்டாக்கள் மட்டுமே.

சே வரலாறு மட்டும் அல்ல... அநீதிக்கெதிராக போராட வேண்டிய வழி முறை...

Cuban revolutionist symbol of rebellion died today.

அடுத்த செய்தி