ஆப்நகரம்

ஒரு லட்சம் பேர் மரணம்; 3.73 லட்சம் பேர் குணம்: கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள உலகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை பலியாகியுள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலி, அமெரிக்காவில் தலா 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரானாவின் கோரப்பசிக்கு இரையாகியுள்ளனர்.

Samayam Tamil 11 Apr 2020, 12:44 am
உலக நாடுகளை இன்று உண்டு, இல்லை என்று ஆக்கி கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இதன் கோரத்தாண்டவத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளே நடுநடுங்கி போய் உள்ளன.
Samayam Tamil world


கடந்த நான்கு மாதங்களாக உலகை வதைத்துவரும் கொரோனாவுக்கு பல்வேறு நாடுகளில் இதுநாள்லரை மொத்தம் 16.77 லட்சம் பேர் ஆளாகியுள்ளனர். இவர்களில் 1.01 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேரும், அமெரிக்காவில் 18, 016 பேரும் கொரோனாவின் கோரப்பசியில் இரையாகியுள்ளனர்.

நாம் தயாராகவில்லை; வைரஸை அன்றே கணித்த பில் கேட்ஸ்!!

இதேபோன்று ஸ்பெயினில் 15,970 பேரும், பிரான்சில் 13,197 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மாண்டுள்ளனர். பிரிட்டனில் மொத்தம் 8, 958 பேரின் உயிரை கொரோனா வைரஸ் குடித்துள்ளது.

மாதக்கணக்கில் தொடரும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இத்தகைய மிக மோசமான சூழலில், கொரோனா தொற்றுக்கு ஆளானோரில் 3.73 லட்சம் இதுநாள்வரை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது மட்டுமே ஒரே ஆறுதலாக செய்தியாக உள்ளது.

அடுத்த செய்தி