ஆப்நகரம்

கொலையாய் கொல்லும் கொரோனா; தலைசுற்ற வைக்கும் பலி எண்ணிக்கை!

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 13 Feb 2020, 9:25 am
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு கொரோனா என்ற வைரஸ் மனிதர்களை தாக்கத் தொடங்கியது. இது விலங்குகளின் இறைச்சியில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிறருக்கு வேகமாக பரவியதால் வுஹான் மாகாணம் பெரும் பாதிப்பிற்கு ஆளானது.
Samayam Tamil Coronavirus


இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக அந்த மாகாணத்தை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களால் மேலும் சில நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது.

தற்போது மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.

கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு முழு ஆரோக்கியத்துடன் பிறந்த குழந்தை

இந்தியாவிலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை சீனாவில் 1,355 பேர் வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். 42 ஆயிரத்து 200 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் பலியானது பேரதிர்ச்சியை அமைந்துள்ளது.

இந்த வைரஸிற்கு கோவிட் 19 என்று சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த டயமண்ட் ப்ரின்சஸ் க்ரூஸ் என்ற கப்பலில் பயணித்த 3,000 பயணிகளில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எட்டு இந்தியர்கள் மர்ம மரணம்: நேபாள விடுதியின் உரிமம் ரத்து

இதனால் எந்தவொரு நாடும் இந்த கப்பலை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலிலேயே தவித்து வருகிறது. இதில் 5 தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள் இருக்கின்றனர். இதில் மதுரையை சேர்ந்த அன்பழகன் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்களை அரசுக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது கப்பல் நிர்வாகம் தங்களை நன்றாக கவனித்து வருகின்றனர். டோக்கியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு எங்களிடம் நிலவரத்தை கேட்டுக் கொண்டனர். உதவிக்கு அழைக்க மொபைல் எண்களை அளித்துள்ளனர்.

இன்னும் ஒருவாரத்தில் வீடு திரும்புவோம் என்று நம்புவதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் சீனாவில் வைரஸ் பாதிப்பு நிலவரத்தை ஆராய உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் விரைந்துள்ளனர். அவர்கள் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி