ஆப்நகரம்

கொத்து, கொத்தாக கொன்று குவிக்கும் சிரிய மண்; 19 நாட்களில் 195 குழந்தைகள் உட்பட 931 பேர் பலி!

சிரியாவில் கொன்று குவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 10 Mar 2018, 9:36 am
டமாஸ்கஸ்: சிரியாவில் கொன்று குவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Samayam Tamil death toll now 931 as strikes clashes hit syrias with in 19 days
கொத்து, கொத்தாக கொன்று குவிக்கும் சிரிய மண்; 19 நாட்களில் 195 குழந்தைகள் உட்பட 931 பேர் பலி!


சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வருகிறது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் களமிறங்க, போர் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்களை அழிக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி மக்களைத் தான் அழித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிரிய அதிபர் பஷார் அல்-அஷாத், தீயவைகள் அழிக்கப்படும் போது, சில நல்லவைகளும் அழிந்து தான் போகும்.

சிரியா மக்களுக்கான நாடாக, மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் எனில், துயரங்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் களத்தில் நிகழ்ந்து வருவது, எல்லை மீறிய கொடுஞ்செயல்.

கடந்த சில வாரமாக கிழக்கு கவுட்டாவில் நடைபெற்று வரும் போரில், பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குளோரின் வாயு பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உட்பட உலக நாடுகள், கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 19 நாட்களில் 931 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக பிப்ரவரி 18 முதல் மார்ச் 8 வரை நடைபெற்ற போரில், 195 குழந்தைகள் மற்றும் 125 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Death toll now 931 as strikes, clashes hit Syria’s with in 19 days.

அடுத்த செய்தி