ஆப்நகரம்

பனியால் மூடப்பட்ட சாலையை கடக்கும் மான்கள் : வைரலாகும் ரம்மியமான வீடியோ காட்சி !!

பனியால் மூடப்பட்ட நெடுஞ்சாலையை ஆயிரக்கணக்கான மான்கள் கடக்கும் ரம்மியமான காட்சிகள் அடங்கிய வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 1 Dec 2019, 5:08 pm
ரஷியாவில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மான்கள் பனி மூடியிருக்கும் நெடுஞ்சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil rp


ரஷியாவில் உள்ள ஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது யமல் மாகாணம். இந்த மாகாணத்துக்குள்பட்ட சேல்க்கார்ட் நகரில் இருந்து ஒரு நபர் நட்யம் என்ற நகருக்கு தமது காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, காடுகள் சூழ்ந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் அந்த நபர் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, பனியால் மூடப்பட்டிருந்த அந்த சாலையை ஆயிரக்கணக்கான மான்கள் கடந்து சென்றன.

இதைக் கண்டதும் உற்சாகமடைந்த அந்த நபர், உடனே தனது காரை நிறுத்திவிட்டு, பனி போர்த்திய அந்தச் சாலையை மான்கள் கடந்து செல்லும் ரம்மியான காட்சியை தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார்.

12 நிமிடங்களுக்கும் மேலாக பட மெடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் சாலையை கடப்பது தத்ரூபமாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ரஷியாவில் தற்போது கடும் குளிர்காலம் என்பதால், அப்பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி