ஆப்நகரம்

டாக்கா தாக்குதலில் தொடர்பில்லை - ஐ.எஸ்.ஐ விளக்கம்

டாக்காவில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ விளக்கம் அளித்துள்ளது.

TNN 4 Jul 2016, 7:38 pm
இஸ்லாமாபாத்: டாக்காவில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil dhaka atttack no part of isi
டாக்கா தாக்குதலில் தொடர்பில்லை - ஐ.எஸ்.ஐ விளக்கம்


வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்தினர். இதில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலியாகினர்.

வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாயத்துல் முஜாஹிதின் என்ற உள்நாட்டு தீவிரவாத அமைப்பு, இந்த தாக்குதல் நடத்தியதாகவும், இவர்களுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வங்கதேச அரசு அறிவித்தது.

இந்நிலையில் வங்கதேச பிரதமரின் அரசியல் ஆலோசகர் ஹுசைன், ஜமாயத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் இதற்கு ஐ.எஸ்.ஐ அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது வருந்ததக்க செயல் என்றும் கூறியுள்ளது.

அடுத்த செய்தி