ஆப்நகரம்

டாக்கா உணவு விடுதியில் ஐஎஸ் தாக்குதல் - பிணைக்கைதிகள் மீட்பு

வங்கதேசத்தில் உணவு விடுதி ஒன்றில் ஐஎஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர்.

TNN 2 Jul 2016, 11:46 am
டாக்கா: வங்கதேசத்தில் உணவு விடுதி ஒன்றில் ஐஎஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர்.
Samayam Tamil dhaka restaurant isis attack
டாக்கா உணவு விடுதியில் ஐஎஸ் தாக்குதல் - பிணைக்கைதிகள் மீட்பு


வங்கதேசத்தின் குல்ஷன் பகுதியில் உள்ள ஹோலி ஆர்டிசன் உணவு விடுதியில் ஆயுதங்களுடன் மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துக் கொண்டனர். தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் உணவு விடுதியை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு பின்னர், 20க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டதாக ஐ எஸ் அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வங்கதேச அரசு இதனை மறுத்துள்ளது.

நேற்று இரவு 11 மணி வரை நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி