ஆப்நகரம்

ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது: ராஜபக்சே

விடுதலை புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்பிருந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

TNN 2 Feb 2017, 1:08 pm
கொழும்பு: விடுதலை புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்பிருந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil do not remove the control of the military in north and east zone rajapaksa
ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது: ராஜபக்சே


இதுகுறித்து அவர் கூறியதாவது: சிறிசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ராணுவக் கத்துப்பாட்டை குறைத்து விட்டது. விடுதலை புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்பிருந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை அகற்றக் கூடாது என்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்தது. அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து புத்துணர்வு ஊட்டியதற்கான விளைவுகளை தற்போது சிறிசேனா தலைமையிலான அரசு சந்தித்து வருகிறது என்றும் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.

முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக முன்னாள் விடுதலை அமைப்பை சேர்ந்த நான்கு பேரை இலங்கை அரசு கைது செய்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Do not remove the control of the military in North and East zone: Rajapaksa

அடுத்த செய்தி