ஆப்நகரம்

பெண்ணிற்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

வரலாற்றில் முதன்முறையாக மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

Samayam Tamil 22 Oct 2021, 3:27 pm

ஹைலைட்ஸ்:

  • வெற்றிகரமாக செய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை முக்கியமான தீர்வுக்கான மருத்துவ உலகின் ஒரு மைல்கல்
  • உடலுக்குள் பொருத்தாமல், உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்களுக்கு கண்காணிப்பு
  • சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்
உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வந்தாலும், மனித உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் உறுப்புகள், திருடப்படும் உறுப்புகள் என ஏரளமான குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

அப்பெண்ணின் பெற்றோரது அனுமதியை பெற்று இந்த மாற்று அறுவை சிகிச்ச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர். பன்றியின் சிறுநீரகத்தை மூளைச் சாவு அடைந்த பெண்ணின் ரத்த நாளங்களில் பொருத்தி, அதனை உடலுக்குள் பொருத்தாமல், உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்களுக்கு கண்காணித்ததாகவும், அப்போது, அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கோட்டையில் என்ன நடக்கிறது?
பன்றி உள்ளிட்ட விலங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த மாற்று அறுவை சிகிச்சை சோதனை முக்கியமான தீர்வுக்கான மருத்துவ உலகின் ஒரு மைல்கல்லாகும்.

அடுத்த செய்தி