ஆப்நகரம்

நாயுடன் நடக்க தடை: உலகின் மிக கடுமையான லாக்டவுன்!

உலகிலேயே மிக கடுமையான பொதுமுடக்கம் தெற்கு ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 4:07 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா கட்டுப்படுவதற்கான அறிகுறிகள் இல்லாததாலும், பொருளாதார சிக்கள் பெருகியதாலும் இந்தியா உள்பட பல நாடுகளிலும் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது.
Samayam Tamil நாயுடன் நடைபயிற்சி


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் திடீரென பெருகியுள்ளதால் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாயுடன் நடைபயணம் போவது, வீட்டுக்கு வெளியே உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில்தான் இந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வர முடியும்.

ஒரே இரவில் கோடீஸ்வரன்; உங்ககிட்ட இந்த கல் இருக்கா? ரூ.10 கோடி கிடைக்குமாம்!

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கஃபேக்கள், உணவகங்கள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிலய்ட் நகரில் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களிடம் இருந்து ஒரு உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மேலும் பரவுவதை தடுக்க பொதுமுடக்கம் அவசியம் எனவும், கொரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கும் அறிகுறிகளே இல்லை எனவும் மாகாண அரசின் பிரீமியர் வேதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி