ஆப்நகரம்

ட்ரம்ப்தான் மீண்டும் அமெரிக்க அதிபராம்... ஆதரவாளர்கள் கணிப்பு!!

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கணித்துள்ளனர்.​

Samayam Tamil 27 Jul 2020, 10:52 pm
இந்த ஆண்டு இறுதியில் (நவம்பர் 3) அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடெனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Samayam Tamil us election


தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு நிலவரங்களின்படி ஜோ பிடெனைவிட ட்ரம்ப் பின்தங்கி தான் உள்ளார். ஆனால், இறுதியில் அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஜோ பிடென் தமது தேர்தல் பிரசாரங்களில் பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, ட்ரம்பின் பிரசாரத்தில் 2016 தேர்தல் பிரசாரத்தைவிட உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அடம்பிடிக்கும் ட்ரம்ப்... அமெரிக்க தூதரகத்தை மூடிய சீனா!

மேலும், 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போதும், ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டன் முன்னணியில் இருந்தார். ஆனால், தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி ட்ரம்ப் வெற்றிவாகை சூடினார். அதே வரலாறு தற்போது மீண்டும் திரும்பும் எனவும் அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கர்கள் எங்களுக்கு உத்தரவு போட முடியாது: இந்தியா அதிரடி!

அத்துடன், அதிபர் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் 270 உறுப்பினர்களின் முடிவே அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால், மீண்டும் ட்ரம்ப்தான் அமெரிக்க அதிபர் என்பதே அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக உள்ளது.

அடுத்த செய்தி