ஆப்நகரம்

ஏமனில் இரட்டை கார் குண்டு வெடிப்பு

ஏமனில் நடந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

TOI Contributor 6 Jul 2016, 12:03 pm
ஏடன்: ஏமனில் நடந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil double car bomb attack kills six near aden airport
ஏமனில் இரட்டை கார் குண்டு வெடிப்பு


ஏமன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஏடன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ராணுவ தளத்தின் நுழைவு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் குறைந்தது 6 பேர் வரை பலியாகியுள்ளதாக இவரை வெளியான தகவலில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் ராணுவத் தளத்தை இலக்காகக் கொண்டதற்கான காரணங்களை காவல்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள். இத்தாக்குதலை ஜிகாதி தீவிரவாத அமைப்பினர் நடத்தியிருக்க கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி