ஆப்நகரம்

இர்மா புயலில் லாபம் பார்த்த கொள்ளையர்கள்

அமெரிக்காவில் இர்மா புயல் தீவிரமாகியுள்ள நிலையில், அங்குள்ள கடைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

TNN 11 Sep 2017, 11:38 pm
அமெரிக்காவில் இர்மா புயல் தீவிரமாகியுள்ள நிலையில், அங்குள்ள கடைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil dozens busted for looting in miami fort lauderdale
இர்மா புயலில் லாபம் பார்த்த கொள்ளையர்கள்


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தற்போது இர்மா புயல் கடுமையாக வீசி வருகிறது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய இந்த புயல், கரீபியின் தீவுகளை மிரட்டி விட்டு தற்போது 200 கிமீ வேகத்தில் புளோரிடாவில் நிலை கொண்டுள்ளது.

இர்மா புயலின் வேகத்தில் வீட்டின் கூறைகள் பிய்த்துக் கொண்டும், சாலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் வேறோடு பிடுங்கிக்கொண்டும் இருப்பதால், மாநிலமே அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில், அங்குள்ள பிரபல சுற்றுலா தளமான மியாமி அருகேயுள்ள ஃபோர்ட் லவுடர்டேல் நகரில், புயலின் தாக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை கும்பல் ஒன்று கடைகளை சூறையாடியுள்ளது.

கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட 9 பேர் மற்றும் இதில் தொடர்புடைய 2 பேர் மொத்தம் 11 பேரரை கைது செய்துள்ளனர். .

அடுத்த செய்தி