ஆப்நகரம்

ஐ.நா சபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று உரை

ஐ.நா சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று உரையாற்றுகிறார்.

TNN 26 Sep 2016, 9:51 am
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகரை நேற்று வந்தடைந்தார்.
Samayam Tamil eam sushma swaraj to address un general assembly session today
ஐ.நா சபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று உரை

Leading India's delegation to the 71st UNGA. EAM @SushmaSwaraj arrives in New York pic.twitter.com/hFJp0nImDR— Vikas Swarup (@MEAIndia) September 24, 2016
முன்னதாக கடந்த 21ஆம் தேதி பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீரில் இந்தியா அடக்குமுறையை பின்பற்றி அப்பாவி மக்களை ஒடுக்குவதாக குற்றம் சாட்டினார். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளும் சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்துக்கு பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை அரங்கேற்றிவரும் பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் தொலைநோக்கு திட்டம் குறித்து சுஷ்மா சுவராஜ் பேச உள்ளார்.

English Summary: EAM Sushma Swaraj to address UN General Assembly Session today.

அடுத்த செய்தி