ஆப்நகரம்

சீனாவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

சீனாவில் ஜின்ஜியாங் உய்குர் என்ற இடத்தில் இன்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Samayam Tamil 6 May 2020, 5:41 pm
சீனாவில் ஜின்ஜியாங் உய்குர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil சீனாவில் நிலநடுக்கம்


கொரோனா தொற்றில் இருந்து சீனா தற்போது சிறிது, சிறிதாக மீண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வுகானில் தற்போது மீண்டும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால்,புதிதாக யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை.

உலகிலேயே முதலில் சீனாவின் வுகானில்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது. 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000த்துக்கும் அதிகமானோர் கொரோனவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா: ஜப்பானில் அவசர நிலை மே 31 வரை நீட்டிப்பு
கொரோனா அபாயம் தீர்ந்தது: வுகானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
இந்த நிலையில் இன்று மாலை ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் இருக்கும் வுகியா கவுண்டியில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக சேத விவரங்கள் தெரிய வரவில்லை.

இதேபோல், ஈரானில் இருக்கும் பைரூசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி