ஆப்நகரம்

இந்தோனேசியாவில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 400ஆக உயா்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 400ஆக உயா்ந்துள்ளது.

Samayam Tamil 29 Sep 2018, 3:33 pm
இந்தோனேசியாவில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 400ஆக உயா்ந்துள்ளது. தொடா்ந்து கடற்கரையேரம் மனித உடல்கள் ஒதுங்கி வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil Indonesia Tsunami 1


இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோளில் 7.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் பலு பகுதியில் 6.6 அடி உயரத்தில் கடல் அலை ஊருக்கு புகுந்தது. இந்த விபத்தின் போது கடற்கரை திருவிழாவை கொண்டாட கரை அருகே திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்தில் தொடா்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து கடற்கரை ஓரம் சடலங்கள் ஒதுங்கி வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 400 போ் உயிாிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது.


இந்த பேரிடரில் 3.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி