ஆப்நகரம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி வருமா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Dec 2020, 6:15 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரதான தீவான லுஸானில் பட்டங்காஸ் மாகாணம் இருக்கிறது. இப்பகுதியில் இன்று 6.3 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Seismograph


இவங்க எல்லாம் கண்டிப்பா கோவிட்-19 தடுப்பூசி போடணுமாம்!
பிலிப்பைன்ஸ் நில அதிர்வு மற்றும் எரிமலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, தலைநகர் மனிலாவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கலடாகன் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் 102 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 7.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மனிலா மற்றும் அண்டை மாகாணங்களான பட்டங்காஸ், லகுனா, கேவைட், ரிஸால் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு நில அதிர்வுகள் ஏற்பட்டாலும், சேதம் இருக்காது என நில அதிர்வு மற்றும் எரிமலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சசிகுமார் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபலங்கள்!
மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நில அதிர்வு மற்றும் எரிமலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரெனாடோ சொலிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சேதம் ஏற்படவில்லை என ஆய்வு மையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி