ஆப்நகரம்

சீனாவில் பொதுமக்கள் 8 பேர் கத்தியால் குத்திக் கொலை!

சீனாவில், பொதுமக்கள் 8 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Feb 2017, 3:58 pm
சீனாவில், பொதுமக்கள் 8 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil eight killed in knife attack in chinas xinjiang
சீனாவில் பொதுமக்கள் 8 பேர் கத்தியால் குத்திக் கொலை!


அந்நாட்டின் வடமேற்கே உள்ள ஜிங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பிஷான் என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. உய்குர் முஸ்லீம் இன மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், அவ்வப்போது தீவிரவாதச் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இதன்படி, நேற்று பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த கடைத்தெரு ஒன்றில் திடீரென ஊடுருவிய 3 பேர், கைகளில் வைத்திருந்த கத்தியால் சராமரியாக தாக்கினர். இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நிகழ்த்திய 3 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த நபர்கள் என்றும், அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Eight people were killed in a knife attack on a crowd in China's restive Xinjiang region, including three assailants who were gunned down by police, local officials said on Wednesday.

அடுத்த செய்தி