ஆப்நகரம்

பலருக்கு கோவிட்-19 மருந்தே தேவையில்லை... இங்கிலாந்து வல்லுநர் அதிர்ச்சி தகவல்!

கோவிட்-19 நோயாளிகள் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து தேவைப்படாது என்று இங்கிலாந்தை சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Jul 2020, 1:13 pm
கொரோனாவால் உலகளவில் 1.07 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,16,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 6,26,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil கோவிட்-19 தடுப்பு மருந்து


உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல ஆய்வாளர்களும், நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து தேவைப்படாது என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்றுநோயியல் பேராசிரியர் சுனெத்ரா குப்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா கொள்ளை நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது நீண்டகால அடிப்படையில் பயன் தராது எனக்கூறும் சுனெத்ரா குப்தா, பொது முடக்கங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வயது முதிர்ந்தவர்கள், பலவீனமானவர்கள், மற்ற நோய் கோளாறுகள் இல்லாதவர்களை தவிர சாதாரணமாக, ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையில்லை.

சாதாரண நபர்களுக்கு கொரோனா ஒரு சாதாரண காய்ச்சலை போன்றதுதான். ஆக, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அது நோய் ஆபத்து அதிகம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மக்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவைப்படாது.

கொரோனா கொள்ளை நோய் இயற்கையாகவே அழிந்துவிடும். கொரோனாவை தடுப்பதில் பொது முடக்கங்கள் உதவியிருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அவை உதவாது. வெற்றிகரமாக பொது முடக்கத்தை அமல்படுத்திய நாடுகளிலும் கொரோனா கோரதாண்டவம் ஆடிவருவதை பார்க்கிறோம்” என்று கூறினார்.

அடுத்த செய்தி