ஆப்நகரம்

சிரியா: டமாஸ்கஸ் ராணுவ விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு

சிரியாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 13 Jan 2017, 7:34 am
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil explosions hit damascus military airport says syria state tv
சிரியா: டமாஸ்கஸ் ராணுவ விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு


சிரிய நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ்க்கு மேற்குப் பகுதியில் அந்நாட்டின் ராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ராணுவ விமானங்களுக்காக பிரத்யேக விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு, விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான SANA வெளியிட்டுள்ள செய்தியில், குண்டுவெடிப்பு நிகழ்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாக கூறியுள்ளது. இதையடுத்து ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு விரைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. அதில் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் காரணமாகவே, புகைமண்டலம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

A series of explosions ripped through a military airport on the western outskirts of Damascus overnight Friday, Syrian state TV reported.

அடுத்த செய்தி