ஆப்நகரம்

ஆட்கடத்தல்காரர்களின் மனதை வசீகரிக்கும் விளம்பரம்; அதிரடியாக நீக்கிய பேஸ்புக்...!

போர் அல்லது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களை ஈர்ப்பதற்குப் பேஸ்புக்கில் ஆட்கடத்தல்காரர்கள் பகிர்ந்த விளம்பரப் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

TNN 29 Aug 2017, 10:35 pm
லண்டன்: போர் அல்லது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களை ஈர்ப்பதற்குப் பேஸ்புக்கில் ஆட்கடத்தல்காரர்கள் பகிர்ந்த விளம்பரப் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
Samayam Tamil facebook removed kidnappers advertisement
ஆட்கடத்தல்காரர்களின் மனதை வசீகரிக்கும் விளம்பரம்; அதிரடியாக நீக்கிய பேஸ்புக்...!


மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவிற்குச் செல்ல முயற்சிப்பவர்களைக் குறிவைத்து ஆட்கடத்தல்காரர்கள் விளம்பரம் ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அரபியில் எழுதப்பட்டிருந்த அதில், வெற்றிக்கரமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றடைந்தவர்கள் பேசிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாகத் துருக்கியிலிருந்து கிரீஸ், எகிப்திலிருந்து இத்தாலிக்கு செல்வது வெற்றிக்கரமான பாதையாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிழக்கு மத்திய தரைக்கடல் வழியாகத் துருக்கியிலிருந்து இத்தாலி மற்றும் கிரீஸ் சென்றோரின் எண்ணிக்கை 2014-யை விட 17 மடங்கு உயர்ந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு எண்ணிக்கை 885,000. 2014-ல் இவ்வழியில் சென்றோரின் எண்ணிக்கை 50,000. இவ்வழியே ஐரோப்பியாவைச் சென்றடைய ஆட்கடத்தல்காரர்கள் 30 ஆயிரம் இந்திய ரூபாய்($450) முதல் ஒரு லட்சம் ($1500) வரை 30,000 முதல் வாங்குவதாகக் கூறப்படுகின்றது.

இதில் காப்பீட்டு உறுதிக்கூட வழங்குப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது ஒரு முறை செல்ல முயற்சித்துக் கடற்படையிடம் சிக்கிவிட்டால் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காம் முறையாகக்கூட இலவசமாக அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்பதே அந்த உறுதி.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையைச் சேர்ந்த பாலோ கம்பானா, “சமூக வலைத்தளங்கள் வழியாக விளம்பரப்படுத்துவது ஆட்கடத்தலுக்கான ஒருவிதமான உத்தி.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 மில்லியன் பேர் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சென்றுள்ளனர். அதில் 95% பேர் கடல் வழியாகப் பயணித்துள்ளனர். கடல் வழியாகச் செல்ல வேண்டுமென்றால் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பின்றிப் பயணிக்கவே முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Facebook removed kidnappers advertisement.

அடுத்த செய்தி