ஆப்நகரம்

Fact Check: 30 ஆண்டுகளுக்கு முன் கொரோனா குறித்து சதாம் உசேன் பேசினாரா?

சதாம் உசேன் அமெரிக்க தன்னை கொரோனா வைரஸைக் கொண்டு மிரட்டுவதாக சொன்னாரா?

Samayam Tamil 26 Mar 2020, 7:55 pm
கொரோனா பரவலால் நாடு தவிக்கத் தொடங்கியுள்ளது. 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, வதந்திகளும் பொய்ச் செய்திகளும் மறுபுறம் வைரஸுக்குப் போட்டியாகப் பரவி வருகின்றன.
Samayam Tamil saddam hussain


இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா குறித்து சதாம் உசேன் பேசினார் என்ற தகவலுடன் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராயத்தொடங்கியது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பிரத்யேகமான குழு.

பரவும் செய்தி:
1990ஆம் ஆண்டு தனது அமைச்சரவையில் சதாம் உசேன் பேசும்போது, கொரோனாவைரஸை வைத்து எப்படி அமெரிக்கா நம்மை மிரட்டுகிறது பாருங்கள் என்று சொன்னதாகச் சொல்லும் செய்தியுடன், சதாம் உசேனின் காணொலியும் இணைக்கப்பட்டுள்ளது.

Listen to Saddam Hussein was in a 1990 meeting with his cabinet, telling them how America was threatening Iraq with Corona Virus.

உண்மை என்ன?
இது போலியாக உருவாக்கப்பட்ட காணொலி. அந்தக் காணொலியில் இருப்பது சதாம் உசேன்தான். அது சதாம் உசேனின் அமைச்சரவைக் கூட்டம் தான். ஆனால், பேசப்பட்ட செய்தி மட்டும் சதாம் உசேன் சொன்னது கிடையாது. அது மாற்றியமைக்கப்பட்ட செய்தி. சதாம் உசேனின் குரலில் பேசப்பட்டு அந்தக் காணொலியின் மீது பொருத்தப்பட்டுள்ளது.


எப்படி கண்டுபிடித்தோம்:

மீண்டும் மீண்டும் ( குறைந்தபட்சம் இரண்டு முறை) அந்த வீடியோவைக் கவனிக்கும் போது குரல் மீது குரல் மோதுவதை கவனிக்க முடிகிறது.

Associated Press (AP) என்ற செய்தி நிறுவனத்தின் முத்திரையும் அந்தக் காணொலியில் உள்ளது. இதைத் தேடிப்போனபோது 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அந்தக் காணொலி பதிவேற்றப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

president with his military advisors என்ற தலைப்பில் வெளியான இந்தக் காணொலி இப்போதும் காணக்கிடைக்கிறது. இதன் மீதுதான் போலி ஆடியோ வைக்கப்பட்டு பொய்க்காணொலி பரவி வருகிறது.

முடிவு:
இது ஒரு பொய்யான காணொலி. சதாம் உசேனின் வேறொரு வீடியோவின் மீது கொரோனா குறித்து பேசியதாக ஒரு போலி ஆடியோ பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி