ஆப்நகரம்

ரத்த ஆறாக மாறிய கடல் - 1,500 டால்பின்களை கொன்ற மக்கள்!

பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 Sep 2021, 8:03 pm

ஹைலைட்ஸ்:

  • ரத்த ஆறாக மாறிய கடல்
  • 1,500 டால்பின்களை கொன்ற மக்கள்!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil dolphin
டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின் வடக்கில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இங்கு வருடா வருடம் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்.
இந்நிலையில், பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, கடற்பகுதிக்கு அருகே 1,500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தன.
பணிக்கு வர வேண்டாம்: ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!
ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. 'சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக, இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதேவேளையில் தங்களின் உணவு தேவைக்காகவே டால்பின்களை கொல்வதாகவும், தங்கள் உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்றும் பரோயே தீவு வாசிகள் தெரிவிக்கின்றனர். டால்பின்களின் ரத்தக்குவியலுடன், கடற்கரையே சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி